NSE Scandal: சித்ரா ராமகிருஷ்ணனிடம் தீவிர விசாரணை

cbi-to-seek-two-week-custody-for-nse-scandal-chitra-ramkrishna
சித்ரா ராமகிருஷ்ண

NSE Scandal: தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் நேற்று நள்ளிரவு சி.பி.ஐ., கைது செய்து தீவீர விசாரணை நடைபெற்று வருகிறது.

தேசி பங்கு சந்தை நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த 2013 முதல் 2016ம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார். அவருடைய பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி ) அவர் மீது குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்தது அவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியது என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் மும்பையில் உள்ள, சித்ரா ராமகிருஷ்ணன் வீடு உட்பட, அவருக்கு தொடர்புடைய அலுவலகங்களில், மும்பை வருமான வரி புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கடந்த மாதம் (17ந்தேதி) சோதனை மேற்கொண்டனர். இதேபோல ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது.

மேலும் தேசிய பங்கு சந்தையின் நிதி மற்றும் வணிக திட்டங்கள், நிதி முடிவுகள் உள்ளிட்ட ரகசிய தகவல்களை இமயமலையில் உள்ள ஒரு யோகியுடன், சித்ரா ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டதாகவும், ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீடுகள் குறித்தும் அவரிடம் கலந்தாலோசித்ததாகவும் கூறப்பட்டது. அது தொடர்பாகவும் விசாரணை நடந்து வந்தது.

இதையும் படிங்க: Today petrol diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்


இதையடுத்து தேசிய பங்கு சந்தை விவரங்களை கசியவிட்டதாக சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ரவி நரேன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ.) கடந்த மாதம் 18ந்தேதி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் மூவரில் யாரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பதை உறுதி செய்வதற்காக எல்.ஓ.சி. பிறப்பிக்கப்பட்டது.

மும்பையில் விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், இமயமலை யோகி, சித்ரா ராமகிருஷ்ணன் இடையேயான பல்வேறு மின்னஞ்சல்களை சி.பி.ஐ. ஆய்வு மேற்கொண்டனர் இந்நிலையில் . சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசகராகவும், முன்னாள் செயலாக்க அதிகாரியாகவும் செயல்பட்டு வந்த ஆனந்த் சுப்பிரமணியம் தங்கியிருந்த இடம் அதிகாரிகளுக்கு தெரிய வந்ததையடுத்து. அவரை, சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 25ஆம் தேதி சென்னையில் வைத்து கைது செய்தனர்.

இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணன் முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் முன் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் டில்லியில் நேற்று (மார்ச்;6) நள்ளிரவு சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். நேற்றிரவு முதல் விசாரணையை தொடங்கினர். விசாரணையின் போது சொகுசு வீடு கட்டி வருவதாக சித்ரா ராமகிருஷ்ணன் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


CBI to seek two-week custody of ex-NSE CEO Chitra Ramkrishna

இதையும் படிங்க: Demonte colony 2: தயாராகும் டிமான்டி காலனி இரண்டாம் பாகம்