Adani group: இந்திய சிமெண்ட் துறையில் களமிறங்கும் அதானி

Adani group
இந்திய சிமெண்ட் துறையில் களமிறங்கும் அதானி

Adani group: ஆசியாவின் பணக்காரரான கெளதம் அதானி குழுமம், சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஹோல்சிம் லிமிடெட் இந்தியாவின் பெரும்பான்மையான பங்குகளை 80 ஆயிரம் கோடிக்கு வாங்கவுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அதானி நிறுவனம் துறைமுகம், ஆற்றல்துறை, நிலக்கரி சுரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது ஹோல்சிம் லிமிட்டெட் பங்குகளை வாங்குவதன் மூலம் சிமெண்ட் துறையிலும் களமிறங்கவுள்ளது.

கடந்த வருடம் அதானி குழுமம் அதானி சிமெண்டேசன் லிமிட்டெட் மற்றும் அதானி சிமெண்ட் லிமிட்டெட் என்ற 2 துணை நிறுவனங்களை நிறுவியது. இதில் அதானி சிமிண்டேஷன் நிறுவனம் 2 சிமெண்ட் யூனிட்டுகளை குஜராத் தாஹேஜ் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ரைகார்கில் நிறுவ திட்டமிட்டுள்ளது.

இதற்போது ஹோல்சிம் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஏசிசி லிமிட்டெட் மற்றும் அம்புஜா சிமெண்ட் இரண்டையும் இணைத்து இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சிமெண்ட் நிறுவனமாக உருவெடுக்கவுள்ளது.

Adani group wins race to buy Ambuja Cements, ACC for $10.5 bn from Holcim

இதையும் படிங்க: Stock Market: இந்திய பங்கு சந்தை இன்று ஏற்றத்துடன் தொடக்கம்..!