Skin whitening: முகத்தை 5 நிமிடத்தில் வெள்ளையாக்க 5 கற்பூரவல்லி இலைகள் போதும்..!

karpuravalli
கற்பூரவல்லி இலைகள்

Skin whitening: நிறைய பேருக்கு தங்களுடைய முகம் கருப்பாக இருக்கிறது என்ற கவலை இருக்கும். கருப்பா இருந்தாலும் அழகு தான். இருப்பினும் நம்மில் நிறைய பேர் இந்த கருப்பு நிறத்தை விரும்புவது இல்லை அல்லவா. உங்களை நீங்கள் வெள்ளையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் இந்த குறிப்பை பின்பற்றி பார்க்கலாம். கண்ணை சுற்றி சில பேருக்கு கருப்பு நிறம் இருக்கும். சிலபேருக்கு கழுத்தில், சில பேருக்கு வாயை சுற்றி, அடர்த்தியாக கருப்பு நிறம் இருக்கும். சிலபேருக்கு முகம் முழுவதும் டல்லாகவே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த குறிப்பை பின்பற்றி பலனடையலாம்.

இந்த குறிப்புக்கு நமக்கு கட்டாயமாக தேவைப்படக்கூடிய பொருள் கற்பூரவல்லி. ஓமவல்லி என்று கூட சிலர் இதை சொல்லுவார்கள். அந்த கற்பூரவள்ளி இலைகளிலிருந்து 5 இலைகளை எடுத்து தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய உரலில் இந்த கற்பூரவல்லி இலைகளைப் போட்டு நசுக்கினால் நன்றாக விழுது போல் அரைந்து விடும். இந்த கற்பூரவள்ளி விழுதை ஒரு பவுலில் எடுத்து போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த விழுதோடு தயிர் 1 ஸ்பூன், கடலை மாவு – 1 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 1/2 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல திக்காக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை உங்களுடைய முகத்தில் ஃபேஸ் பேக் போட்டு, 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். நன்றாக காய்ந்ததும் உங்களுடைய கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, முகத்தையும் நனைத்துக்கொண்டு வட்ட வடிவில் 5 நிமிடம் லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும்.

அவ்வளவு தான். வாரத்தில் இரண்டு நாள் இந்த பேக்கை பயன்படுத்தி பாருங்கள். உங்களுடைய முகத்தில் இருக்கும் தேவையற்ற கருநிறம் படிப்படியாக குறையும். இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இந்த குறிப்பை பின்பற்றிவிட்டு உங்களுடைய முகத்தில் பொலிவு வந்தவுடன் பிறகு தொடர்ந்து இந்த குறிப்பை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இந்த குறிப்பை 12 வயதிற்கு மேலே உள்ள எல்லோரும் பயன்படுத்திப் பார்க்கலாம். ஆண் பெண் இருபாலருக்கும் இந்த குறிப்பு நல்ல பலனைக் கொடுக்கும். உங்களுக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின் என்றால், இந்த பேக்கை லேசாக உங்களுடைய சருமத்தில் பேட்ச் டெஸ்ட் எடுத்து பார்த்து விட்டு அதன் பின்பு முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிங்க: Today Horoscope: இன்றைய ராசி பலன்