Rs.1 lakh each for agriculture graduates: வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி

நாமக்கல்: A financial assistance of Rs. lakh each for the youth of agriculture graduates. வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம் 202223-ம் ஆண்டு மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டத்தின் மூலம் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.

திட்டமானது பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைபடுத்தும் திட்டம் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் தொடங்கலாம். தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் உற்பத்தியை பெருக்க வேளாண் பட்டதாரிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். மேலும் விவசாயிகளிடமிருந்து காய்கறி மற்றும் பழங்களை நியாமான விலையில் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விநியோகிக்கலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற 21 முதல் 40 வயதிற்கு உட்பட்ட வேலையில்லா வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டதாரி இளைஞர்கள், சிறந்த கணினி புலமையும் வேளாண்மை தொடர்புடைய செயலிகளை பயன்படுத்தும் திறனும் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பத்துடன் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.பட்டப்படிப்பு சான்றிதழ்,அதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் விரிவான செயல்திட்ட அறிக்கையுடன் விண்ணப்பத்தினை சம்பந்தபட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்

மேலும் இது சம்பந்தமான கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அல்லது நாமக்கல், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.