Leader of Opposition Edappadi K. Palaniswamy : மழையால் பாதிக்கப்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை : Crops were damaged due to rain,Rs.30,000 should be provided per acre, Leader of Opposition Edappadi K. Palaniswamy: தமிழகத்தில் அண்மையில் பெய்த பலத்த மழையால் பயிர்கள் சேதமடைந்த நிலையில், ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பலத்த மழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் (Mayiladuthurai, Cuddalore, Nagapattinam, Tiruvarur) போன்ற மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பாசன நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

கடலூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மூழ்கியுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் அதிகாரிகளை நேரில் அனுப்பி கணக்கெடுத்து, அனைவருக்கும் நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி நாள் நவ.15 (Last date for crop insurance is Nov 15) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயிர்க் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நவம் பர் மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும்.

விவசாயிகளிடம் நேரில் சென்று அவர்களது நிலங்களைக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போது பெய்த பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் (Rs. 30 thousand should be given relief per acre for affected lands) என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் அண்மையில் பெய்து வரும் பலத்த மழையால் சென்னை, தேனி, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றுள்ளது. இதனால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளதோடு, பயிர்களும் சேதமடைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் (Farmers are severely affected).