புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
அதில் மிக முக்கியமாக குறிப்பிட்டுள்ளவை,2.5 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசம்.மகளிர் அனைவருக்கும் இலவச பொது போக்குவரத்து வசதி செய்துத்தரப்படும்.
அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.2000 உதவித்தொகையாக பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.நடமாடும் நியாயவிலைக்கடைகள்.
புதுச்சேரி காரைக்கால் துறைமுகங்கள் நவீனப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படும்.