Opposition Deputy Leader Issue: எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார்? சபாநாயகரை சந்திக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

சென்னை: சட்டமன்ற கூட்டத்தொடர் (Opposition Deputy Leader Issue) நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் நேற்று (ஜனவரி 9) நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சட்டசபையில் எந்த விஷயம் பேச வேண்டும் என்பன பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் அளித்ததை நிறைவேற்றாதது, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் உள்ளிட்டவைகள் பேசவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்வதற்கு இக்கூட்டத்தொடரில் மீண்டும் வலியுறுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது. இது பற்றி சபாநாயகரை இன்று சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி முடிவு எடுக்கவில்லை எனில் சபாநாயகருக்கு எதிராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குரல் எழுப்ப நேரிடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.