More than 5 crore people have uploaded selfies: இல்லந்தோறும் மூவர்ணக்கொடி வலைதளத்தில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் செல்பி படங்கள் பதிவேற்றம்

புதுடெல்லி: More than 5 crore people have uploaded selfies on Tricolor: இல்லந்தோறும் மூவர்ணக்கொடி வலைதளத்தில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் செல்பி படங்கள் பதிவேற்றம் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகத்தான சாதனையாக இல்லந்தோறும் மூவர்ணக்கொடி வலைதளத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக்கொடி செல்பி படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்தியா சுதந்திரத்தின் 76வது ஆண்டைத் தொடங்கும் வேளையில்,விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்னும் 75 வார கவுன்ட் டவுன் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்துடன் இன்று (ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன்) முடிவடைந்துள்ளது.

இந்த இயக்கத்தில் மாலை 4 மணி வரை 5 கோடி செல்பி படங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க தருணமாகும்.

இந்த சாதனை பற்றி குறிப்பிட்டுள்ள கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சம் திரு கிஷன் ரெட்டி, கடமை உணர்வு கொண்ட இந்தியர்களின் நாடு முதலில் என்ற கூட்டு முயற்சியை இது பிரதிபலிப்பதாக கூறியுள்ளார். அனைவருக்கும் அவர் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழக சுதந்திர தினக் கொண்டாட்டம்:
எஃகு அமைச்சகத்தின் கீழுள்ள நாட்டின் மிகப்பெரிய இரும்புத்தாது உற்பத்தி நிறுவனமான நவரத்னா சுரங்க நிறுவனமான, தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகம் 76-வது சுதந்திரதினத்தையொட்டி, ஐதராபாத்தில் உள்ள அந்நிறுவன தலைமையகம் மற்றும் அதன் திட்டம் செயல்படும் பிற இடங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து, இந்திய சுதந்திரதினத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடியது. தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் திரு. சுமித் தேவ், ஐதராபாத்தின் தலைமையகத்தில், நிறுவனத்தின் மூத்த பணியாளர் திரு.சங்கரியாவுடன் இணைந்து பணியாளர்கள் முன்னிலையில் மூவண்ணக் கொடியை ஏற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் இயக்குநரான திரு.சுமித் தேப், “நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அளப்பரியது. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகம் தன்னை தொடர்ந்து அர்ப்பணித்துக் கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் நேரத்தில், தாய்நாட்டுக்கு மரியாதை, நன்றி தெரிவிக்கும் வகையில், அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி, இல்லந்தோறும் மூவண்ணக்கொடி கொண்டாட்டத்தில் முழுமனதுடன் பங்கேற்க வேண்டும். மகத்தான இந்த தேசத்தின் நெறிமுறைகளை பாதுகாப்பது நமது கடமை.