கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை வெற்றிகரமாக கெரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று அதில் நிறைய மக்கள் இலவச தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர் இதை ஊக்குவிக்கும் வகையில் பல பரிசுகள் வழங்கப்பட்டன.mega vaccination drive tn
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 14-வது கட்ட மெகா முகாமில் 20 லட்சத்து 45 ஆயிரத்து 347 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 50 ஆயிரம் இடங்களில் நேற்று நடைபெற்றது.