இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா

Sri Lanka Economic Crisis
மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை விதித்தது நீதிமன்றம்

Sri Lankan PM Mahinda Rajapaksa: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ‘ராஜபக்சே சகோதரர்கள் ராஜினாமா செய்ய மறுத்தால், 11ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்’ என, தொழிற்சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

இந்த நெருக்கடி காரணமாகவும், மக்களின் போராட்டம் காரணமாகவும் மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. முன்னதாக அதிபர் கோத்தபய வீட்டில் நடந்த சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் பெரும்பாலான அமைச்சர்கள், பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது மகிந்த ராஜபக்சே, தான் பதவி விலகுவது மட்டும்தான் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு என்றால் அதை செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் ராஜபக்சேயின் அலுவலகம் எதிரே மகிந்த ராஜபக்சேவின் எதிர்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 17 பேர் காயமடைந்தனர். இதனால் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தொடர் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Sri Lankan PM Mahinda Rajapaksa sends his resignation to President

இதையும் படிங்க: Soya 65: 10 நிமிடத்தில் செய்யலாம் சோயா 65