Grand Mosque collapses: இந்தோனேசியாவில் தீவிபத்தில் இடிந்து விழுந்த பெரிய மசூதி

ஜகார்த்தா: Giant dome of Jakarta Islamic Centre Grand Mosque collapses after fire breaks out. இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா இஸ்லாமிய மையப் பெரிய மசூதியின் ராட்சத குவிமாடம் தீப்பிடித்ததில் இடிந்து விழுந்தது.

இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா இஸ்லாமிய மையப் பெரிய மசூதியின் ராட்சத குவிமாடம் நேற்று பெரும் தீவிபத்தில் இடிந்து விழுந்தது. இந்த தீவிபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இதில் மசூதியின் குவிமாடம் இடிந்து விழும் காட்சிகள் பதிவாகியிருந்து. இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் இல்லை என்று அதிகாரிகள் கூறியதாக செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மசூதியின் குவிமாடம் புதுப்பிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டு எரிந்து நாசமானது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்குப் பிறகு தீ பற்றி எரிந்தது, இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மசூதியின் குவிமாடம் இடிந்து விழுவதற்கு சற்று முன்பு அதிலிருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை கிளம்பியதை வெளியான வீடியோ காட்சிகள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அந்த நேரத்தில் இஸ்லாமிய மையம் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவிபத்து அல்லது அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இடிபாடுகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், கட்டிடத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மசூதியைத் தவிர, இஸ்லாமிய மைய வளாகத்தில் கல்வி, வணிக மற்றும் ஆராய்ச்சி வசதிகளும் உள்ளன. இந்த மசூதியின் குவிமாடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கும் போது இதேபோல் தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்பட்ட தீயை அணைக்க ஐந்து மணிநேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடியதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.