தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,449 பேருக்கு கொரோனா

corona-vaccine-for-12-to-14-yrs-group
கொரோனா தடுப்பூசி

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,449 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 1,548 பேர் மீண்டுள்ளனர். 16 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் மொத்தமாக 16,749 பேர் தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் தமிழ்நாட்டில் மொத்தம் 26,71,411 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 849 பேர் ஆண்கள். 600 பேர் பெண்கள். தலைநகர் சென்னையில் 179 பேரும், கோவையில் 151 பேரும், செங்கல்பட்டில் 113 பேரும் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ‘டாக்டர்’ படத்தின் சூப்பர் ஹிட் அடித்த செல்லம்மா செல்லம்மா’ கிளிம்ப்ஸ் வெளியீடு..!