நவம்பர் 1 முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படாது

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

நவம்பர் 1 ஆம் தேதி முதல், 1 முதல் 8 ஆம் வகுப்புகல் வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இம்மாதம் 14 ஆம் தேதி தமிழக அரசு கொரோனா தொற்றுக்கான (Coronavirus) கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது. அந்த தளர்வுகளின் பள்ளிகள் திறப்பு குறித்த பல முக்கிய அறிவிப்புகளும் இருந்தன.

அந்த தளர்வுகளில், நவம்பர் 1 முதல் அங்கன்வாடி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், ஆகியவையும் முழுமையாக செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகளின் அனைத்து ஊழியர்கள், ஆசிரொயர்கள், நிர்வாகிகள் என அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்தமுறை அரசு அறிவிப்பில் நர்சரி திறக்கப்படும் என வந்த அறிவிப்பு தவறாக அச்சடிக்கப்பட்டு விட்டது என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முடி கருமையாக செழித்து வளர உதவும் கரிசலாங்கண்ணி…!