TN news : ரூபாய் 309.75 கோடி நிதி

covid cases
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் தலைதூக்கும் கொரோனா

TN news : கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக இந்த உலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.மேலும் இந்தியாவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தது.தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று காரணமாக காரணமாக பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டன.தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கிவருகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யவும், அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அத்துடன் நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடியாக நிவாரணத் தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் சமூக நலன் & மகளிர் உரிமைத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் இன்று பேசிய அமைச்சர் கீதா ஜீவன்,அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளும் திட்டம் மூலம் சுமார் 91.85 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் 267 குழந்தைகள் தத்து வழங்கப்பட்டுள்ளனர். மூத்த குடிமக்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. 2031ம் ஆண்டில் மாநிலத்திலுள்ள மூத்த குடிமக்களின் விழுக்காடு 18.20% ஆக உயரும்போது எண்ணிக்கை 1.50 கோடியாக இருக்கும் என்றார்.TN news

இதையும் படிங்க : sensex and nifty : இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,663 குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு விளக்கமளித்தார்.

( covid relief fund )