TN Budget 2022: தமிழக பட்ஜெட் 2022 – 2023 முக்கியம்சங்கள்

tn-budget-2022-ptr-update
தமிழக பட்ஜெட் 2022 - 2023

TN Budget 2022: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடுவது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை உள்ளிட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. விவசாயத்துக்கான நிதிநிலை அறிக்கை தனியாக தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக பட்ஜெட் 2022 – 2023 முக்கியம்சங்கள்

1.திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார் நிதியமைச்சர் பிடிஆர்.

2. தமிழகத்தின் எதிர்கால சந்ததியின் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

3. பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

4. முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 10,01,883 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது – பிடிஆர்

5. தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 7 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.

6.  ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையால் இந்த ஆண்டில் 20 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொள்ள நேரிடும்

7. தமிழ் மொழியின் தொன்மை, செம்மையை நிலைநாட்டிட நடவடிக்கை

8.  அகர முதலி உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

9. தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் அச்சிடப்படும்.

10. பெரியாரின் எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிடப்படும். இதற்காக 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11. அரசு நிலங்களில் நில அளவை பணிகளை எளிதாக மேற்கொள்ள நடவடிக்கை

12. பேரிடரை முன்கூட்டியே அறிந்து சொல்ல புதிய தொழில்நுட்பங்களுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

13.  சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14.   அணைகளை புனரமைக்கும் திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

15. கால்நடைப் பராமரிப்பு துறைக்கு ரூ.1,315 கோடி நிதி ஒதுக்கீடு

இதையும் படிங்க: Budget 2022: அனைத்து மாவட்டங்களில் புத்தகக்காட்சி நடத்தப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு