திருப்பதி போக கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. திருப்பதி பெருமாள் தான் உலகிலேயே மிகவும் பணக்காரக் கடவுள் என்ற பெருமை பெற்றவர். இக்கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர்.

இந்நிலையில் தற்போது திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இனி 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் கொண்டு வரவேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது., செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கும் வகையில் இலவச தரிசனம் டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படும்.

இதையும் படிங்க: வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து