soft and smooth skin : மென்மையான சருமம் பெற இதோ சில டிப்ஸ் !

soft and smooth skin : மென்மையான சருமம் பெற இதோ சில டிப்ஸ்
soft and smooth skin : மென்மையான சருமம் பெற இதோ சில டிப்ஸ்

soft and smooth skin : சருமத்தில் ஈரப்பதம் இருந்தால்தான் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம்.ஈரப்பதம் இல்லை என்றல் சருமத்தில் சுருக்கங்கள் விழுந்து வயதான தோற்றத்தை தரும்.இதை வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மூலம் பெறலாம்.

இறந்த சரும செல்கள் உங்கள் துளைகளை அடைத்து உங்கள் தோலை கரடுமுரடாக உணர வைக்கும். எக்ஸ்ஃபோலியேட்டிங் செய்வதன் மூலம் இந்த லேயரை அகற்ற உதவுகிறது.குளிப்பதற்கு முன் சில நிமிடங்களுக்கு ஒரு மென்மையான பிரஷ் கொண்டு தெளிப்பதன் மூலம் இறந்த செல்கள் நீக்கலாம்.இல்லை என்றால் மென்மையான ஃபேஷியல் ஸ்க்ரப் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.

இரவு உறங்க செல்லும் முன்பு சருமத்தில் மாய்ஸ்சரைசரை கண்டிப்பாக தடவ வேண்டும்.இதன் மூலம் சருமம் சுருக்கம் விழாமல் இருக்கும்.

மேலும் சருமம் மென்மையாக இருக்க வேண்டும் என்றால் உடம்பிற்கு சரியான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.தொடர்ந்து தண்ணீர் குடிப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் மற்றும் உங்கள் சரும செல்களை நீரேற்றவும் உதவுகிறது.