Shani Amavasya 2021: சங்கடம் தீர இதை மறக்காமல் செய்யுங்கள் !

Shani Amavasya 2021 donate food for poor removal of sani dhosam

Shani Amavasya 2021: கார்த்திகை மாத அமாவாசை டிசம்பர் 4ஆம் தேதி அதாவது சனிக்கிழமை வருகிறது. சனி அமாவாசை நாளில் நீங்கள் சில செயல்களைச் செய்தால் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் கஷ்டப்படுபவர்கள் சனிக்கிழமை அமாவாசை நாளில் சில பரிகாரங்களை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.

பொதுவாகவே அமாவாசை திதி தினத்தன்று முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து தானம் கொடுப்பார்கள். காக்கைக்கு உணவு கொடுப்பார்கள். ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்கள்தான் சிறப்பானது என்று புனித தீர்த்தங்களில் நீராடி படையலிட்டு வழிபடுவது வழக்கம்.

அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது.

ஆகவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வரும் என்றாலும், சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுபட, சனி அமாவாசை அன்று இறந்த முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணமும், அவர்களை நினைத்து செய்யும் நல்ல காரியங்களாலும் பலன்கள் அதிகரிக்கும்.

இதையும் படிங்க: Horoscope Today : இன்றைய ராசி பலன்

இதையும் படிங்க: இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !

( Shani Amavasya 2021 donate food for poor removal of sani dhosam )