Train cancelled: மார்ச் 15 வரை ரயில்கள் ரத்து பயணிகள் அதிர்ச்சி

Train accident
ஆந்திரா ஸ்ரீகாகுளத்தில் ரயில் விபத்து

Train cancelled: இன்று முதல் தென்மாவட்ட ரயில் பாதையில் செல்லும் செங்கோட்டை – கொல்லம் சிறப்பு ரயில், மார்ச் 15ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தென்மாவட்டங்களில் இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் எப்போது முடியும் என நீண்ட காலமாகவே மக்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

மின்மயமாக்கல் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட புனலூர்-கொல்லம் ரயில்வே பாதையில் மின்மயமாக்கல் பணி தற்போது விரைவாக நடந்து வருகிறது.

செங்கோட்டையில் இருந்து கொல்லம் வரை செல்லும் ரயில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தற்போது கொரோனா வைரஸ் முடிந்து மீண்டும் இயக்கப்பட்டது.

இந்த ரயில் தற்போது விரைவு ரயிலாக மாற்றப்பட்டு கடந்த ஆண்டு பயணிகளின் கோரிக்கைகேற்ப டிசம்பர் மாதத்தில் மீண்டும் இயக்கப்பட்டது.

தற்போது இரயில் நிலையத்தில் பல்வேறு புதுப்பிக்கும் பணிகள் மற்றும் மின்சார பணி நடந்து வருவதால் அப்பகுதி வழியாக செல்லும் இந்த ரயில் வரும் மார்ச் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் தென்காசி மாவட்டம் மற்றும் கொல்லம் மாவட்ட மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றார்கள் மார்ச் 15 ஆம் தேதி மீண்டும் முன்பு போல் இந்த ரயில் செயல்படும் என கூறப்படுகிறது.

Red Fort Express special canceled from today till March 15

இதையும் படிங்க: Four died: தூத்துக்குடியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 4 பேர் உயிரிழப்பு