இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரை

பிரதமர் மோடி 26ந் தேதி சென்னை வருகை
பிரதமர் மோடி 26ந் தேதி சென்னை வருகை

இன்று மாலை 6 மணிக்கு சக குடிமக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு மாதமும் இறுதியில் மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலமும் மக்களிடையே பிரதமர் மோடி பேசுகிறார்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா பரவல் மெல்ல குறைந்து வரும் நிலையில், கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டு, தற்போது பல்வேறு கட்ட தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி உள்ளிட்டப் பண்டிகைகள் வரவிருக்கும் நிலையில், ஒரு தகவலுடன் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவிருப்பதாகக் கூறியிருப்பது பொதுமக்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய உரையின் போது, பண்டிகை கால முன்னெச்சரிக்கைகள், கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி அறிவுறுத்தரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நாட்டின் அடிமட்டத்தில் இருந்து பேணிக் காக்க வேண்டிய சுகாதார அமைப்புகளைப் பற்றியும், அதை பாதுகாக்க வேண்டிய கடமையைக் குறித்தும் பிரதமர் மோடி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.