பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் 2021 !

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கவும், பதிலளிக்கவும் அரசு தயாராக உள்ளது என்றார்.

நாடாளுமன்றத்தின் 25 நாள் குளிர்காலக் கூட்டத்தொடர், விவசாயச் சட்டங்களை ரத்து செய்வது உட்பட 36 மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று ஆஜராக வேண்டும் என்று 3 வரி விப் பிறப்பித்துள்ளன.

இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு 26 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியிகியுள்ளன.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்துக்கு வந்தார்.

இன்று தொடங்கி நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் காரசார விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.