Weather Update: தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எச்சரிக்கை

Weather Update: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் ,புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 23.03.2022 முதல் 25.03.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

அதிகபட்ச வெப்பநிலையானது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்

சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்

கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதையும் படிங்க: Beast Release: பீஸ்ட் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு