Pournami: மாசி மகம் பௌர்ணமி தினத்தின் சிறப்புக்கள்…

Masi Magam Pournami
மாசி மகம் பௌர்ணமி தினத்தின் சிறப்புக்கள்

Pournami: மகம் நட்சத்திரம் எல்லா மாதத்திலும் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. மாசி மகம் பௌர்ணமி தினத்தின் சிறப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மாசி மாதத்தில் வருகிற பெளர்ணமியன்று தான் மாசி மக திருநாளைக் கொண்டாடுகிறோம். மாசி மகத்தன்று விரதம் இருந்து நம்பிக்கையோடு வழிபட்டு வந்தால், இந்த உலகத்தையே ஆளும் வாய்ப்பும், ஆசீர்வாதமும் கிட்டும் என்பது நம்பிக்கை…

பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு சகல செல்வங்களையும் கொண்டு வந்து சேர்க்கும். இந்த தினத்தில் விரதம் இருந்து முறையாக வழிபாடு செய்திட நினைத்த காரியம் நிறைவேறும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு தமிழ் மாத பௌர்ணமியிலும் குறிப்பிட்ட தெய்வத்திற்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய என்னென்ன பலன்கள் கிடைக்கலாம் என்பதை அறிந்து கடைப்பிடித்திட சிறப்பான பலன்களை பெறமுடியும்.

மகம் நட்சத்திரத்திற்கு அதிபதி நவகிரகங்களில் நிழற்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் ஆவார். இவர் ஞானத்தையும், மோட்சத்தையும் அதிகம் அருள்பவர்.

இதையும் படிங்க: Karnataka Hijab Row: 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு