நாளை உலக மீன்வள தினம்..!

நாளை உலக மீன்வள தினத்தை ஒடிசாவின் புவனேஸ்வரில் அமைந்துள்ள மன்சேஸ்வர் ரயில் அரங்கில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை கொண்டாட உள்ளது.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள இணை அமைச்சர் எல். முருகன், மீன்வளத்துறை செயலாளர் ஜதீந்திர நாத் ஸ்வைன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

மத்திய, மாநில அதிகாரிகள் மட்டுமில்லாது நாடு முழுவதிலும் இருந்து மீனவர்கள், தொழில் முனைவோர், துறை நிபுணர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு விருதுகளும் வழங்கப்பட இருக்கிறது. விஞ்ஞானிகள் கலந்து கொள்ளும் தொழில்நுட்ப அமர்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

மீன்வளத்துறையின் சாத்தியக்கூறுகளை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, 20,050 கோடி ரூபாய் மதிப்பிலான பிரதமரின் மத்சய சம்பதா திட்டத்தை கடந்த 2020 மே மாதம் தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.