தமிழகத்தில் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை

tn-news-schools-and-colleges-holiday-tomorrow
பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

இந்தியா முழுவதும் நீதிமன்றங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் அக்டோபர் மாதத்தில் மட்டும் அதிக நாட்கள் விடுமுறை என்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தசரா விடுமுறை என 11 நாட்கள் அறிவித்துள்ளது.

இந்தியாவில் அக்டோபர் 15-ஆம் தேதி தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதை அடுத்து பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலர்கள் உள்பட அனைத்தும் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது என்பது தெரிந்ததே.

அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

இதில் அக்டோபர் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மட்டும் விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும். இந்த நீதிமன்றத்தில் அவசர கால வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதுரையில் அக்டோபர் 11-ஆம் தேதி அவசர வழக்குகளை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என வழக்கமாக இரண்டு நாட்களுக்கு மட்டுமே நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் ஆனால் இந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தசரா விடுமுறையை 11 நாள் அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரபல நடிகைக்கு குணப்படுத்த முடியாத தோல் வியாதி!