Kamal Hassan: கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது- கமல் ஹாசன்

kamal
கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது

Kamal Hassan: கர்நாடகாவில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்து மாணவிகள் காவி துண்டு அணிந்து வந்தனர். இதனால் கர்நாடக மாநில அரசு மாணவ- மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் மற்றும் காவி துண்டு அணிந்து வந்தனர். இதனால் இருபிரிவினர் கல்லூரிக்கு வெளியே போராட்டம் நடத்தினர். அப்போது, பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி மோதல்காரர்களை விரட்டி அடித்தனர்.

நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.’’ எனப் பதிவிட்டுள்ளார்.

Karnataka hijab row: Kamal Haasan says issue creating communal divide, shouldn’t happen in Tamil Nadu

இதையும் படிங்க: petrol and diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !