இன்று தேவாலயங்களில் மும்மணி நேர சிறப்பு வழிபாடு

இன்று புனித வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அந்த நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர்.

அந்த 40 நாட்களின் கடைசி ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையை புனித வெள்ளிக்கிழமையாகவும், துக்க நாளாகவும் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். இந்த நாளில்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார்.

இந்த புனித வெள்ளியை இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். இந்த நாளில் தேவாலயங்களில் மும்மணி நேர சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடத்தப்படும்.

சிலுவையில் அறையப்பட்ட நாளில் இருந்து 3-வது நாளில் இயேசு உயிர்ந்தெழுந்தார். அந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகை என்று கொண்டாடுவார்கள்.