former NSE CEO chitra ramakrishna : சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்

former-nse-ceo-chitra-ramakrishna-7-day-cbi-remand
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்

former NSE CEO chitra ramakrishna : தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் நேற்று நள்ளிரவு சி.பி.ஐ., கைது செய்து தீவீர விசாரணை நடைபெற்று வருகிறது.

தேசி பங்கு சந்தை நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த 2013 முதல் 2016ம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார். அவருடைய பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி ) அவர் மீது குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்தது அவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியது என குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போது இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பங்குச்சந்தை தொடர்பாக ஆலோசனை பெற்று சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டதாக அவர் மீது செபி குற்றம்சாட்டியது. அந்தச் சாமியாரின் ஆலோசனைப்படிதான் ஆனந்த் சுப்ரமணியனை தேசிய பங்குச் சந்தையின் சீஃப் ஸ்ட்ரேடஜிக் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா நியமித்ததாகவும் தெரிவித்தது.

சிபிஐ மற்றும் சித்ரா ஆகிய இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் வாதிட்டதையடுத்து, சிறப்பு நீதிமன்றம் சித்ராவை ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியது. உண்மையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக நடந்த விசாரணையின் போது பல கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லாமல் தவித்தார் என்பது உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து சிபிஐ சிபிஐ தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாள் காவலில் வைக்க கோரியிருந்தது.சிபிஐ, 2018 ஆம் ஆண்டு முதல் இந்த NSE சந்தை முறைகேடு மோசடியை விசாரித்து, 2013 மற்றும் 2016 க்கு இடையில் சித்ரா அனுப்பிய மற்றும் பெற்ற 2500 க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களின் விவரங்களைப் பெற முடிந்தது.

இதையும் படிங்க : Tn news : கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இதற்கிடையில், சிபிஐ காவலில் வைக்கப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா, பரபரப்பான கேள்விகளுக்கு மத்தியில் ஆன்மீக ஆறுதலைப் பெற பகவத் கீதையின் நகலை கோரியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

( 7-day remand for Chitra Ramkrishna )