Corona virus: கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..!

தேர்தலில் களமிறங்கும் இளம் பட்டதாரி வேட்பாளர்கள்
தேர்தலில் களமிறங்கும் இளம் பட்டதாரி வேட்பாளர்கள்

Corona virus: கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு மாநிலமும் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் கொரோனா கட்டுப்பாடுகளையும் வாபஸ் பெற்றுக் கொண்டு வருகிறது. ஏனென்றால் இந்திய அளவில் உச்சத்தில் இருந்த கொரோனாவின் பாதிப்பு கடந்த ஓரிரு நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் ஒவ்வொரு மாநில அரசும் இத்தகைய நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு ஆகிய இரண்டும் திரும்ப வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் நாளை முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. இதனை போல மேற்கு வங்கத்திலும் வருகின்ற 3ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பிப்ரவரி மாதம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி புதுச்சேரியில் நடைமுறையிலுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கல்விநிறுவனங்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

அதோடு உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. கடற்கரை சாலைகள் முழுநேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கி புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 100% முழுவதுமாக பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி மாநில அரசு கூறியுள்ளது.

இதையும் படிங்க: Murder: மதுக்கடை அருகே கட்டிட தொழிலாளி சரமாரி குத்திக்கொலை