Education news : பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

education-news-10-11-12-public-exam
பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

education news : கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.தற்போது இந்த மூன்றாம் அலையில் பரவலை தடுக்க வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கிட்டத்தட்ட 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.கடந்த செப்டம்பர் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று நேரடி வகுப்புகள் நடைபெற்றன.

தற்போது கொரோனா தொற்றின் மூன்றாம் அலை காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.தற்போது தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மே 5-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 10, மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25-ல் தொடங்கி மே 2 வரை நடக்கும். அதைத் தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 முதல் 28-ம் தேதி வரை நடக்கும். சுமார் 8.36 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.education news

அதேபோல, பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 10 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும். இதில் 8.49 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடக்கிறது. சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.

இதையும் படிங்க : weather report tn : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

( tamilnadu 10th ,11th and 12th exam time table )