கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்க அனுமதி

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஜூலை 26ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களை திறக்கலாம். கல்வி நிறுவனங்களுக்கு வரும் அனைவரும் குறைந்தது ஒரு தவணையாவது தடுப்பூசி போட்டிருக்கவேண்டும். விருப்பப்படும் மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்கலாம்.

நீண்ட கால தொழில்நுட்ப படிப்புகள் உட்பட அனைத்து திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இன்று 1869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.