மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்..!

தமிழகத்தில் “ மாஸ்க் ”அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
தமிழகத்தில் “ மாஸ்க் ”அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டு இருப்பதை காண முடிகிறது.

இந்நிலையில் வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் இப்போதே அதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

அதன்படி சென்னையில் 15 மண்டலங்களில் தலா 3 குழுக்கள் வீதம் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முழுவீச்சில் உள்ளனர்.

இந்த குழுக்களில் காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் கூட்டாக இணைந்து செயல்படுகின்றனர். கடந்த 31ம் தேதி முதல் 3ம் தேதியான நேற்று வரை மட்டும் முகக்கவசம் அணியாத 2,608 பேரிடம் இருந்து ரூ.5.48 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக சென்னையில் அதிகமாக மக்கள் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதன் பலனாக நேற்று ஒரே நாளில் மட்டும் மாஸ்க் அணியாத 1,022 பேரிடம் இருந்து ரூ.2.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக, சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககந்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Amma Mini-Clinic: அம்மா மினி கிளினிக் மூடல்