படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்

டீசல் விலை உயர்வால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே டீசல்மீதான அனைத்து வரிகளையும் நீக்கம் செய்து, உற்பத்தி விலைக்கு டீசல் வழங்க வேண்டும். குறிப்பாக கடலில் மீன்பிடி தொழில்புரியும் படகுகளுக்கு வரி தேவை இல்லை.

எனவே வரி நீக்கம் செய்யப்பட்ட டீசல் வழங்க வேண்டும். மீனவர்கள் பிடித்துவரும் ஏற்றுமதி தரமிக்க இறால், மீன்களுக்கு உரிய விலை கிடைக்க அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

மீன்பிடி தடை காலத்தை 30 நாட்களிலிருந்து 60 நாட்களாக அதிகப்படுத்தி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். டீசல் மானியத்தை உயர்த்தி 4,000 லிட்டராக விசைப்படகுகளுக்கும், 600 லிட்டராக நாட்டுப் படகுகளுக்கும் மாதம் ஒன்றிற்கு வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்பது விக் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.