ரூ.5,000 கொரோனா நிவாரணம்: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது தரவுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் உள்ளது. ஆரம்பத்தில் போடப்பட்ட கடுமையான ஊர் அடங்கினால் விவசாயிகள், சிறு குறு வியாபாரிகள் மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி மற்றும் பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவைகளை இலவசமாக தமிழக அரசு வழங்கியது.

அத்துடன், அனைவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாட அரசு நிதி வழங்கக்கூடும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா ரூ.5,000 நிவாரண உத்தரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.