போலி மருத்துவ தொழில் செய்வது சமூகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் – உயர்நீதிமன்றம் கருத்து

போலி சான்றிதழ் பெற்று மருத்துவம், வழக்கறிஞர் தொழில் செய்வது சமூகத்துக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போலி சான்றிதழ் மூலம் வழக்கறிஞர்கள் தொழில் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மனுதாரரான மருத்துவர் பெற்றுள்ள சான்றுகள் பொய் என தெரிய வருவதால் மனுவை திரும்பப்பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சியில் தனது மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையின் போது மனுதாரர் ஜெயபாண்டியின் சான்றிதழை ஆய்வு செய்த போது போலி என தெரிந்தது.

வழக்கு விசாரணையை நவம்பர் 11-க்கு ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி வைத்தியநாதன் ஒத்திவைத்தார்.