காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று உறுதி

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குலாம் நபி ஆசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதியானதால் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டதாகவும், மேலும் கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா நடைமுறைகளை பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளார்.