Goddess Lakshmi: வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி துதி சொல்லுங்கள்

வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி துதி சொல்லுங்கள்
வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி துதி சொல்லுங்கள்

Goddess Lakshmi: லெட்சுமி என்றாலே செல்வம் என்று அர்த்தம். மகாவிஷ்ணு கூட லட்சுமியை துதிகளால் போற்றுவதாகச் சொல்கிறது தேவி பாகவதம். வெள்ளிக்கிழமைகளில் தினத்தில் லட்சுமியை வழிபடுவது மங்காத செல்வத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும்.

தேவேந்திரன், குபேரன், எமன், மனு உத்தானபாதன், துருவன், தட்சன், காச்யபர், வசிஷ்டர், மகாபாலி, சூரியன், புதன், வள்ளி ஆகியோர் லட்சுமி பூஜை செய்து பலன் பெற்றவர்கள். லட்சுமிதேவி எளிமையான பூஜையாலேயே சந்தோஷம் அடைபவள்.

தூய மனத்துடன் சுத்தமான உடை அணிந்து, சுத்தமான இடத்தில் திருவிளக்கேற்றி மனதார வணங்கினால் போதும், லட்சுமியின் கரம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும் வீட்டினுள் லட்சுமிகரம் நிறையும்.

வெள்ளிக்கிழமை தினத்தில் மனம் முழுக்க அலைமகளை நினைத்து துதியைச் சொல்லி வழிபடுங்கள். பொன்மகள் அருளால் உங்கள் வாழ்வில் இன்று முதல் புத்துணர்ச்சியும் குதூகலமும் பிறக்கும்.

இதையும் படிங்க: Lakshmi Kubera Pooja: லட்சுமி குபேர விரதத்தை எப்படி அனுசரிக்க வேண்டும் தெரியுமா?