Transfer of doctors is unfair – Anbumani: மருத்துவர்கள் இடமாற்றம் செய்வது, தண்டிப்பது அநீதி: அன்புமணி ராமதாஸ்

சென்னை: Anbumani Ramadoss said that the transfer of doctors by the minister is unfair. வேலூர் அருகே மருத்துவர்களை அமைச்சர் பணியிடமாற்றம் செய்துள்ளது அநீதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், பொன்னை அரசு மருத்துவமனையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போதிய மருந்துகள் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து , மலைப்பகுதி என்பதால் அங்கு பாம்புக் கடிக்கான மருத்ததுகள் இல்லை; மருத்துவர்களும் பணியில் இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தததை அடுத்து, பெண் மருத்துவர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்ய மா சுப்பிரமணியன் பரிந்துரைத்தார். அப்போது, அமைச்சர் துரைமுருகன் யாரும்மா நீ எந்த ஊரு என்று கேட்டு, நீ இவரை கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க என்று கூறினார்.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும், எம்பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் செய்திருக்கிறார். இது ஏற்க முடியாதது ஆகும்.

தமிழகத்தில் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட குறைகள் உள்ளன. பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான பாம்புக்கடி மருந்து அரசிடமிருந்து வரவில்லை என்று மருத்துவர்கள் அமைச்சரிடம் விளக்கம் அளிக்கின்றனர். இதில் மருத்துவர்களின் தவறு எதுவும் இல்லை.

அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் முதன்மைப் பணி. தேவையான மருந்துகளை கோருவதை தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது. இதற்காக அவர்களை தண்டிப்பது அநீதி.

மருத்துவமனை கட்டிடம் பாழடைந்திருப்பதற்காக மருத்துவர்களை இடமாற்றம் செய்வது தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காதது. தமிழக அரசு மருத்துவர்களின் சேவையும், பொறுப்புணர்வும் பலமுறை நிரூபிக்கப்பட்டவை. எனவே, அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.