Thanjavur electrocution: தஞ்சாவூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

mk-stalin
மாநில கல்வி கொள்கை குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது

Thanjavur electrocution: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு. மேலும் 15 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு நடைபெற்றது. அப்போது, தேரை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் சம்பவ இடத்திற்கு நேரில் செல்கிறார். அங்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்துகிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த துயரமான சம்பவத்தை கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயை, முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Thanjavur electrocution: CM announces ₹5 lakh compensation, leaders condole

இதையும் படிங்க: தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழப்பு