Sand hoarding sale in government school: வேலூர்: அரசுப்பள்ளியில் ஆசிரியர்களின் உதவியோடு மணல் பதுக்கி விற்பனை

வேலூர்: வள்ளிமலை அரசுப்பள்ளியில் மணலை பதுக்கி வைத்து (Sand hoarding sale in government school) விற்பனை செய்வதற்காக பள்ளி மைதானத்தை மணல் கொட்டுகின்ற இடமாக சிலர் மாற்றி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது பற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து காட்பாடி வட்டாட்சியர் மணலை பொது ஏலம் விட்டு அதனை அரசு கணக்கில் செலுத்துமாறு மேல்பாடி வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் பள்ளி வளாகத்தில் 15 யூனிட் இருந்ததாகவும், அதனை ரூ.38 ஆயிரத்து 250 ரூபாய்க்கு பொது ஏலம் விடப்பட்டு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுவிட்டதாக தகவல் வெளியிடப்பட்டது.

ஆனால் இதனை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்ட விரோதமாக அரசுப்பள்ளியில் மணலை பதுக்கி வைத்துள்ள குற்றவாளிகளை மாவட்ட போலீசார் கண்டுப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டன் கணக்கில் இருந்த மணலை வெறும் 15 யூனிட் மட்டும்தா இருந்தாக அளவை குறைத்து காட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் மீது மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். எனவே உண்மையை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது.