Warning to be careful : மும்பை தாக்குதல் போன்ற தாக்குதல்களில் ஈடுபட திட்டம்?. கவனமாக இருக்க எச்சரிக்கை

மும்பை: Planning to engage in attacks like the Mumbai attack? : மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய தீவிரவாத தாக்குதல் (26/11) மாதிரியில் மீண்டும் தாக்குதல் (Mumbai terrorist attack threat) நடத்துவோம் என மிரட்டல் செய்தி வந்துள்ளது.

மும்பை போலீஸ் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் (WhatsApp number) எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி வந்ததோடு, மும்பை தாக்குதல் மாதிரியில் தாக்குதல் நடத்தப்படும் என வாட்ஸ்அப் செய்தியில் எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த எண்ணில் இருந்து வாட்ஸ்அப் செய்தி வந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஆறு பேர் கொண்ட குழு இந்த வன்முறை தாக்குதலை நடத்தப்போவதாக மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது மும்பை போலீசார் வாட்ஸ்அப் மெசேஜை அடுத்து, மிரட்டல் செய்தி அனுப்பிய நபரை தேடி வருகின்றனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம் (Railway Station, Bus Station, Airport in Mumbai) உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சந்தேகப்படும் நபர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில், மகாராஷ்டிராவின் ராய்காட் கடற்கரையில் (Raigad Beach, Maharashtra) இரண்டு சந்தேகத்திற்கிடமான ஆயுதங்கள் ஏற்றப்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. படகில் இருந்து 3 ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மற்றொரு படகில் இருந்து வரைபடம் உள்ளிட்ட சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. ஆயுதங்கள் நிரம்பிய படகு பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், மகாராஷ்டிராவில் தீவிரவாத தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் மாதிரியில் நாசவேலைகளைச் செய்ய வேண்டும் என்று மும்பை காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப்-க்கு மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தேசிய அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெறலாம். எனவே எச்சரிக்கையாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

2008 ஆம் ஆண்டு (In the year 2008) இந்தியாவின் மிக பெரிய நகரமான மும்பையில், தீவிரவாதிகள் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட‌ தாக்குதலை நடத்தினர். இதில் 164 பேர் கொல்லப்பட்டனர். 308 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நவம்பர் 26 ஆம் தேதி புதன்கிழமையன்று தொடங்கி நவம்பர் 29 ஆம் தேதி சனிக்கிழமை வரை நீடித்தது.

தாக்குதல்கள் தெற்கு மும்பையில் எட்டு இடங்களில் (Eight locations in South Mumbai) ஏற்பட்டது: சத்ரபதி சிவாஜி முனையம் ,தி ஓபராய் டிரைடன்ட் ஓட்டல் , தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர், லியோபோல்ட் கஃபே, காமா மருத்துவமனை (பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை), நரிமன் ஹவுஸ் யூத சமூக கூடம் ,மெட்ரோ சினிமா, டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டிடத்தின் பின்புறம் உள்ள‌ வழிபாதை மற்றும் சேவியர் புனித கல்லூரி. மும்பை துறைமுகம பகுதி மஜகாணிலும் வில்லே பார்லேயில் ஒரு டாக்ஸியிலும் குண்டு வெடிப்புகள் நடந்தது .நவம்பர் 28 ஆம் தேதி, தாஜ் ஹோட்டல் தவிர அனைத்து தளங்களையும் மும்பை போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தனர் . 29 நவம்பர், தேசிய பாதுகாப்புப் படை தாஜ் ஓட்டலில் ஆபரேஷன் பிளாக் டொர்னாடோ மூலமாக தீவிரவாதிகளை அகற்றித் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்தனர்.