Omicron sub-variant XBB: தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று அதிகரிப்பு

சென்னை: XBB and its strains fast emerging as dominant sub-variant in India, Tamil Nadu tops. தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று அதிகரிப்பது பொதுவானதே என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரிப்புக்கு வழிவகுத்த ஒமிக்ரானின் உருமாற்ற XBB என்ற புதிய வகை தற்போது இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. 9 மாநிலங்களில் தற்போது அதிகரித்து வருவதாகவும், அந்த பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸின் மாற்றங்களைக் கண்காணிக்கும் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான GISAID-ன் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் 23ம் தேதி வரை இந்தியாவில் XBB வரைஸ் தொற்று 380 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான XBB உருமாற்றம் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை 175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம் 103 பேருக்கும், ஒடிசா (35), மகாராஷ்டிரா (21), டெல்லி (18), புதுச்சேரி (16), கர்நாடகா (9), குஜராத் (2) மற்றும் ராஜஸ்தான் (1) பரவியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, XBB உலகளாவிய பரவல் 1.3 சதவீதமாக உள்ளது, மேலும் இது 35 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வைரஸ்களில் உருமாற்றம் என்பது பொதுவானதே, எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது; வைரஸ்களின் உருமாற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.