DRI Chennai seizes 35.6 Kgs Gold: இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 35.6 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: DRI Chennai seizes 35.6 Kgs of Foreign Origin Gold worth Rs.18.34 Crores smuggled through Tamil Nadu coast. தமிழக கடற்கரை வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.18.34 கோடி மதிப்புள்ள 35.6 கிலோ வெளிநாட்டு தங்கத்தை சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) சமீபத்தில் நடத்திய மிகப்பெரிய கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக, 27.10.2022 அன்று தமிழகத்தின் கடலோரப் பகுதி வழியாக கடத்தப்பட்ட ரூ.18.34 கோடி மதிப்புள்ள 35.6 கிலோ வெளிநாட்டு தங்கத்தை பறிமுதல் செய்தது.

டிஆர்ஐ-க்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், மதுரை-ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்க சாவடியில் காரில் பயணித்த 3 பேரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் காரை சோதனையிட்ட அதிகாரிகள், அவர்கள் காரில் மறைத்து கடத்தி கொண்டு வந்த தங்கத்தை மீட்டு, பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை வழியாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

டிஆர்ஐ என்பது இந்திய அரசின் முதன்மையான கடத்தல் தடுப்பு அமைப்பாகும். டிஆர்ஐ சென்னை, கடத்தலைத் தடுப்பதில் எப்போதும் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றது. டிஆர்ஐ சென்னை மேற்கொண்ட தீவிர கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளால் கடந்த ஏப்ரல் முதல் தமிழக கடற்கரை வழியாக 105 கிலோவுக்கு மேல் கடத்தப்பட்ட வெளிநாட்டு தங்கத்தை பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.