Chess competition: தமிழகத்தில் ஜூன் 10 முதல் மாவட்ட வாரியாக செஸ் போட்டி

Chess competition
தமிழகத்தில் ஜூன் 10 முதல் மாவட்ட வாரியாக செஸ் போட்டி

Chess competition: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

உலகளவில் செஸ் போட்டியில் சிறந்து விளங்கக்கூடிய முன்னணி வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனா்.

இந்த போட்டியை மிக பிரமாண்டமான முறையில் நடத்திட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில் வரும் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தமிழகத்தில் மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .

தமிழக அரசு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து செஸ் தொடரை நடத்துகின்றன.செஸ் தொடரில் பங்கேற்க விரும்பும் மனவர்கள் https://prs.aicf.in/players-ல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க: Karthik Gopinath case: யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு