Delhi natural gas: டெல்லி இயற்கை எரிவாயு விலை மீண்டும் உயர்வு

delhi natural gas
டெல்லி இயற்கை எரிவாயு விலை மீண்டும் உயர்வு

Delhi natural gas: டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு எடுத்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் சூழலில், சுற்றுப்புற சூழலில் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இதேபோன்று, அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் அவற்றுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு நிரப்பிய வாகனங்களின் பயன்பாடும் டெல்லியில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 15ந்தேதி இதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு இருந்தது.

அதன்படி, டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் இந்திரபிரஸ்தா எரிவாயு கழகம் (ஐ.ஜி.எல்.), அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) என்ற வாகன பயன்பாட்டிற்கான எரிவாயுவின் விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்தது. இதனால், சி.என்.ஜி. விலை டெல்லியில் ரூ.73.61, நொய்டாவில் ரூ.76.17, குருகிராமில் ரூ.81.94 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

அதேவேளையில், நாட்டின் பிற பகுதிகளிலும் சி.என்.ஜி. விலையை ஐ.ஜி.எல். உயர்த்தி அறிவித்தது. இதன்படி, சி.என்.ஜி. சில்லரை விலையில் கிலோ ஒன்றுக்கு ரேவாரியில் ரூ.81.94, கர்னால் மற்றும் கைத்தல் நகரங்களில் ரூ.82.27, கான்பூர், ஹமீர்பூர் மற்றும் பதேபூரில் ரூ.85.40, அஜ்மீர், பாலி மற்றும் ராஜ்சமந்தில் ரூ.83.88 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் வாகனங்களுக்கான எரிவாயு விலை கிலோ ஒன்றுக்கு ஒரே வாரத்தில் 2வது முறையாக இன்று மீண்டும் ரூ.2 உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், சி.என்.ஜி. விலை டெல்லியில் ரூ.75.61 ஆகவும், நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத்தில் ரூ.76.17 ஆகவும், குருகிராமில் ரூ.83.94 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து, உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் ஏற்பட்ட எரிவாயு விலை உயர்வை அடுத்து, டெல்லியில் ஐ.ஜி.எல். நிறுவனம் தொடர்ந்து சீரான விலை உயர்வை அறிவித்து வருகிறது.

இதையும் படிங்க: Legend Saravana: லெஜண்ட் சரவணனுடன் குத்தாட்டம் போட்ட ராய் லட்சுமி