Cement outlet for Adi Dravidar and tribals: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சிமெண்ட் விற்பனை நிலையம்

சென்னை: Cement outlet for Adi Dravidar and tribals. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் 2022-2023 ஆம் ஆண்டு புதிய அறிவிப்பு எண்.12 மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பில் 100-ல் 80 ஆதிதிராவிடர் மற்றும் 20 பழங்குடியினர் மக்களுக்கும். ஒரு நபருக்கு ரூ.3.00 இலட்சம் என்ற வீதத்தில் 100 நபர்களுக்கு திட்டத்தொகை 3.00 கோடி என்றும் இதில் பயனாளி பங்குத்தொகை ரூ.15.00 இலட்சமும் மானியம் ரூ.90:00 இலட்சமும் வங்கிக்கடன் ரு.195.00 இலட்சம் என்று குறிப்பிட்டு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ஒதுக்கீடு (Assignment to set up cement sales center) செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நிபந்தனைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. தாட்கோ மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்ட பின் சிமெண்ட் முகவருக்கான விண்ணப்பங்கள் TANCEM நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5.000/- வைப்புத்தொகை (Deposit) TANCEM நிறுவனத்திற்கு செலுத்தப்படும்.

சிமெண்ட் விற்பனை தொடர்பான விளம்பரம் செய்வதற்கு தேவையான சிற்றேடு (Brouhures) பிரசுரங்கள் மற்றும் பெயர் பலகை Name Board ஆகியவை TANCEM நிறுவனம் மூலம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் பயனாளிகள் http://application.tahdco.com/ என்ற இணையதளத்திலும் மற்றும் பழங்குடியினர் http://fast.tahdco.com/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம்.