Special buses run for Pongal: பொங்கலுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: The transport department has announced that 16,932 special buses will be operated across Tamil Nadu on the occasion of Pongal festival. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் வரும் 12ம் தேதி முதல் 3 நாட்களுக்கு 16, 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 6,300 பேருந்துகளுடன், 4,449 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10749 பேருந்துகள் இயக்கப்படும் எனவும், பிற ஊர்களிலிருந்து 6,183 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகளுக்காக சென்னையில் கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி ஆகிய 6 இடங்களில் பேருந்து நிலையங்கள் செயல்படும். இதற்காக 12 முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் முன்பதிவு செய்ய https://www.tnstc.in/home.html என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.