Women’s Asia Cup T20 : மகளிர் ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை அக்டோபர் 1ஆம் தேதி எதிர்கொள்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பெங்களூரு: ஆசிய கோப்பை டி20 போட்டியில் ஆண்களுக்கு அடுத்தபடியாக, தற்போது பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகளின் முறை. மகளிர் ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான (Women’s Asia Cup 2022) ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பையில் விளையாடும் இந்திய பெண்கள் அணியில் கர்நாடகாவின் மூத்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் ராஜேஸ்வரி கெயக்வாட் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பை டி20 போட்டியின் 8 வது பதிப்பு வங்கதேசத்தில் அக்டோபர் 1 முதல் 16 வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.

மகளிர் ஆசிய கோப்பை டி20 (Women’s Asia Cup 20222) போட்டியில் விளையாடும் இந்திய அணி:
ஹர்மன் ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தன் (துணை கேப்டன்), ஷெபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, சபினேனி மேக்னா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, தயாளன் ஹேமலதா, மேக்னா சிங், ரேணுகா தாக்கூர், பூஜா கர்வஸ்த்ரா, ராஜேஸ்வரி கெய்க்வாட், ராதா யாதவ், கேபி நவ்கிரே.

இருப்பு: தானியா சப்னா பாட்டியா, சிம்ரன் தில் பகதூர்.

மகளிர் ஆசிய கோப்பை டி20 போட்டி அட்டவணை (Women’s Asia Cup T20 Match Schedule)

அக்டோபர் 1: பங்களாதேஷ் Vs தாய்லாந்து (காலை 9 மணி)
இந்தியா Vs இலங்கை (பிற்பகல் 1.30)

அக்டோபர் 2: பாகிஸ்தான் Vs மலேசியா (காலை 9 மணி)
ஐக்கிய அரபு நாடுகள் Vs இலங்கை (பிற்பகல் 1.30)

அக்டோபர் 3: பங்களாதேஷ் vs பாகிஸ்தான் (காலை 9 மணி)
இந்தியா Vs மலேசியா (பிற்பகல் 1.30)

அக்டோபர் 4: இலங்கை Vs தாய்லாந்து (காலை 9 மணி)
இந்தியா Vs ஐக்கிய அரபு நாடுகள் (பிற்பகல் 1.30)

அக்டோபர் 5: ஐக்கிய அரபு நாடுகள் Vs ​​மலேசியா (பிற்பகல் 1.30)

அக்டோபர் 6: பாகிஸ்தான் Vs தாய்லாந்து (காலை 9 மணி)
பங்களாதேஷ் Vs மலேசியா (பிற்பகல் 1.30)

அக்டோபர் 7: ஐக்கிய அரபு நாடுகள் vs தாய்லாந்து (காலை 9 மணி)
இந்தியா Vs பாகிஸ்தான் (பிற்பகல் 1.30)

அக்டோபர் 8: இலங்கை Vs மலேசியா (காலை 9 மணி)
இந்தியா Vs பங்களாதேஷ் (பிற்பகல் 1.30)

அக்டோபர் 9: மலேசியா Vs தாய்லாந்து (காலை 9 மணி)
பாகிஸ்தான் Vs ஐக்கிய அரபு நாடுகள் (பிற்பகல் 1.30)

அக்டோபர் 10: பங்களாதேஷ் Vs இலங்கை (காலை 9 மணி)
இந்தியா Vs தாய்லாந்து (பிற்பகல் 1.30)

அக்டோபர் 11: பங்களாதேஷ் Vs ஐக்கிய அரபு நாடுகள் (காலை 9 மணி)
பாகிஸ்தான் Vs இலங்கை (பிற்பகல் 1.30)

அக்டோபர் 13: அரையிறுதி-1
அணி 1 Vs அணி 4 (காலை 9 மணி)
இந்தியா Vs இலங்கை

அரையிறுதி-2
அணி 2 Vs அணி 3 (பிற்பகல் 1.30)

அக்டோபர் 15: இறுதிப் போட்டி (final match)