“தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசு திமுக” – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

MK Stalin: மே தின விழாவை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மே தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

தொழிலாளர்களை வாழ்த்தக் கூடிய அரசாக மட்டுமல்லாமல், அவர்களை வாழ வைக்ககூடிய அரசாகவும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அண்ணா, கருணாநிதி ஆட்சியில் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் மன மகிழ்ச்சியோடுதான் இருந்தனர், இப்போதும் அப்படியே இருக்கின்றனர்.

மனிதனை மனிதனே இழுத்த கை ரிக்‌ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷாக்களை நடைமுறைப்படுத்தியது திமுக அரசு தான். இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது திமுக அரசு. என்று கூறினார்.

இதையும் படிங்க: 12 கோபுரங்கள் கொண்ட மீனாட்சி அம்மன் கோவில்