Kamal Haasan : 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதம்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்

சென்னை: Debate on 2024 Parliament Election : President of Makkal Neeti Maiyam Party Kamal Haasan : 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதித்து வருகிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா நகரில் இன்று நடைபெற்றது (It was held today in Anna Nagar, Chennai). கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த கமல்ஹாசன், 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்து வருகிறோம் (We are discussing the 2024 parliamentary election alliance). ஆனால் என்னவென்று இப்போது விவரிக்க முடியாது என்று கூறினார். பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.

முன்னதாக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், ‘கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செய்யக் கூடாது (The mistakes made last time should not be repeated in the upcoming parliamentary elections). தனித்துப் போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்தாலும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும்’ என்று பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், கோவை தெற்குத் தொகுதியில் (Coimbatore South constituency) மக்கள் மையக் கட்சி சார்பில் போட்டியிட்டார். அவர் சட்டப்பேரவைத் தேர்தலில், முதல்முறையாக போட்டியிட்ட தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார்.

அவர் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் 1,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவரது கட்சியைச் சேர்ந்த பலரும் அந்த தேர்தலில் தோல்வி அடைந்தனர். எனவே இந்த முறை நாடாளுமன்றத்தில் அந்த‌ கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெறுவதற்கான ஆயத்தங்களை கமல்ஹாசன் செய்து வருவதாக (Kamal Haasan is making preparations for the party’s candidates to win) அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.